திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் மீனாட்சி நகரைச் சேர்ந்த தம்பதி பாலமுருகன் (31), கவிதா (21). கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த இரண்டு தினங்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நேற்று காலை தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.பெருமாநல்லூர் போலீஸார் சென்று சடலங்களை மீட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.