Regional01

சர்வர் பழுது ரேஷன் பொருள் விநியோகம் சிக்கல்

செய்திப்பிரிவு

தமிழக கூட்டுறவு சங்கங்களின் சிஐடியூ ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் ரா.லெனின் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

ரேஷன் கடைகளில் பாய்ண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி குடும்பத்தில் ஒருவர் வந்து பயோ மெட்ரிக் இயந்திரத்தில் விரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெறும் நடைமுறை உள்ளது. ஆனால் பெரும்பாலான கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் ‘சர்வர்' சரியாக இயங்காததால், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிக்க முடியவில்லை. எனவே ‘சர்வரை’ மேம்படுத்த வேண்டும். அதுவரை பழைய முறையில் பொருட்களை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT