மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் தேசிய இளைஞர் விழா போட்டியில் 15 முதல் 29 வயது வரையிலானோர் பங்கேற்கலாம்.
பாரம்பரிய இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், ஓவியம், பென்சில் வரைபடம், சிற்பம் தயாரித்தல், புகைப்படம் எடுத்தல், எழுத்தாற்றல், பாரம் பரிய விளையாட்டு (யோகா) ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடை பெறும். மாவட்ட அளவிலான போட்டிகள் டிச.29, 30 ஆகிய தேதிகளில் நடை பெறும்.
போட்டியாளர்கள் வீடியோக் களை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலரின் dsomdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
குறுந்தகட்டில் பதிவு செய்த அசல் காப்பியை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.