Regional02

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவருக்கு ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மூலம் உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி இந்த விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், சமூகநலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவராகவும் இருக்க வேண்டும். தங்களைப் பற்றிய விவரங்கள், சேவை செய்தது குறித்த ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT