சிவகங்கையில் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஜி.பாஸ்கரன். அருகில் எம்எல்ஏ நாகராஜன். 
Regional03

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் அமைச்சர், அரசியல் கட்சியினர் மரியாதை

செய்திப்பிரிவு

இதையொட்டி, சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் பூஜையைத் தொடங்கி வைத்தார். ராணி மதுராந்தகி நாச்சியார், சமஸ்தானம் தேவஸ்தானம் மகேஷ்துரை ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அமைச்சர் ஜி.பாஸ்கரன், மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், எம்ஜிஆர் இளைஞரணி மாநிலத் துணைத் தலைவர் கருணாகரன், பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த், காங்கிரஸ் மாநில மகளிரணி துணைத் தலைவர் வித்யா கணபதி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT