திருச்சி மாவட்டம், சமயபுரம் சோழன் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம்(47). இவர் குடும் பத்தினருடன், கடந்த 24-ம் தேதி மதுரை வந்தார். கருப்பாயூரணி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு அன்று பிற்பகல் 2-மணிக்கு மீண்டும் திருச்சி செல்ல மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தார்.
அரசு பஸ்ஸில் ஏறி, பொருட் கள் வைக்கும் இடத்தில் பையை வைத்தார். மேலூர் அருகே பஸ் சென்றபோது பையைக் காணவில்லை. அதில் வைத்திருந்த 21 பவுன் நகை கள் திருடுபோனது தெரிய வந் தது. அண்ணாநகர் காவல் நிலையத்தில் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.