Regional02

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டிஎஸ்பி சரவணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்ஐ சிவசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 25 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்விடத்திலேயே 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

SCROLL FOR NEXT