டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சேந்தமங்கலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேந்தமங்கலம் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துரைசாமி பங்கேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
ஒன்றியச் செயலாளர் செல்லம், மாவட்ட உதவி தலைவர் சதாசிவம், மாவட்ட செயலாளர் வி. பி. சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.