Regional03

இளைஞர் படுகொலை

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி அருகே எழிலூரைச் சேர்ந்தவர் ஐயப்பன்(38). இவர், கடந்த ஆண்டு தனது மனைவி சத்யாவை கொலை செய்து வழக்கில் கைதாகி, தற்போது ஜாமீனில் வந்திருந்தார். தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் நேற்று ஐயப்பன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சத்யாவின் தம்பி விஜய்(20) அரிவாளால் சராமாரியாக வெட்டியதில் ஐயப்பன் அந்த இடத்தில்லேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருத்துறைப்பூண்டி போலீஸார், விஜய், அவருக்கு உடந்தையாக இருந்த இளைஞர் ஒருவர் என 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT