வெளிநாட்டில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி பணம் மோசடி செய்த நபரை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த இன்பராஜ் என்பவரின் மகள் ஸ்டெபி சிப்ரோள் (25). இவர், வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணி யாற்றி வந்தார். மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கு முயற்சித்து வந்துள்ளார்.
ஸ்டெபியின் தந்தை இன்பராஜிக்கு வேலூர் பாகாயம் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் அறிமுகமாகி யுள்ளார். அப்போது, இன்பராஜிடம் தான், மனித உரிமை ஆணையத்திலும், ஊடகத் துறையில் இருப்பதாக சவுந்தர் ராஜன் கூறியுள்ளார்.
மேலும், பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஸ்டெபி மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்காக ஏற்பாடு செய்வ தாக கூறியவர், ரூ.4.75 லட்சம்பணம் செலவாகும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி பல்வேறு தவணைகளில் அவரிடம் ரூ.4.75 லட்சம் பணத்தை இன்ப ராஜ் கொடுத்துள்ளார். அதன்படி, பிலிப்பைன்ஸில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்ப தற்கான கடிதத்தை சவுந்தர்ராஜன் கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்துடன் பிலிப்பைன் ஸில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி ஸ்டெபி சென்றுள்ளார். ஆனால், அங்கு மாணவர் சேர்க்கை எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் எடுத்து வந்தது போலி கடிதம் என கூறியதால் ஸ்டெபி இந்தியாவுக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதையடுத்து, சவுந்தர்ராஜ னிடம் சென்று பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு இன்பராஜ் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்து காலம் கடத்தி யதால் வேலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் இன்பராஜ் புகாரளித்தார்.
அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் இலக்குவன், கவிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை செய்ததில் மோசடி உறுதி யானதால், சவுந்தர்ராஜனை காவல் துறை யினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.