Regional03

கரோனா பரிசோதனை மேற்கொள்ள 10 ஆயிரம் பிசிஆர் கருவிகள் தயார் ஈரோடு ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள பெருந்துறை அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் பிசிஆர் சோதனைக் கருவிகள் தயாராக உள்ளதாக ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 ஆயிரம் பிசிஆர் கருவிகள் மற்றும் 3000 விடிஎம் கருவிகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் 15 ஆயிரம் விடிஎம் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால், அரசு மருத்துவமனைக்கு சென்று இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT