கடலூர் கம்மியம்பேட்டை அருகில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருஉருவ படத்திற்கு கடலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
Regional02

எம்ஜிஆருக்கு அதிமுகவினர் நினைவஞ்சலி

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

விழுப்புரம் மாதாகோயில் அருகே வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமையிலும், வண்டிமேடில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைத்தலைவர் ராமதாஸ் தலைமையிலும், ஆட்சியர் அலுவலகம் அருகே விழுப்புரம் நகர கூட்டு றவு வங்கி துணைத் தலைவர் சக்திவேல் தலைமையிலும் அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT