Regional01

குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி தீ விபத்தில் மரணம்

செய்திப்பிரிவு

மதுரை ஒத்தக்கடையில் குடிபோதையில் தூங்கிக் கொண் டிருந்த தொழிலாளி சிம்னி விளக்கில் இருந்து பரவிய தீயில் கருகி உயிரிழந்தார்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த ராஜூ மகன் முருகன் (40). பூக்கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

ஒத்தக்கடை- திருமோகூர் சாலை யில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் மாடியில் தனது நண்பர் ஆனந்த் என்பவரிடம் முருகன் பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் பணி முடிந்த பின் இரவில் முருகன் வீட்டுக்குச் செல்லவில்லை. கடை யிலேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கடைக்குச் சென்ற ஆனந்த், அங்கு தீக்காயத்துடன் கருகிய நிலையில் முருகன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், குடிபோதையில் கடையில் படுத்தி ருந்த முருகன், வெளிச்சத்துக்காக தனது அருகே சிம்னி விளக்கை வைத்திருந்தார். அதிலிருந்து பரவிய தீ, முருகனின் உடல் முழுவதும் பரவியுள்ளது. இதில் அவர் இறந்தார் எனத் தெரியவந்தது. இருப்பினும், அவரது உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் எஸ்.பி சுஜித்குமார், டி.எஸ்.பி விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT