மாத்தூரில் நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்தில் பேசினார் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ. 
Regional02

திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று தொடக்கம் பி.மூர்த்தி எம்.எல்.ஏ. தகவல்

செய்திப்பிரிவு

மதுரை மாத்தூரில் திமுக கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தில் அடுத்தடுத்து 261 இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ரேஷன் கடைகளில் முறையாகப் பொருட்கள் வழங்கப்படவில்லை. நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறையாகப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்எதொகை பலருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது உட்பட ஏராளமான புகார்களை தெரிவித்தனர். தேர்தல் பணி தொடர்பாக இன்று (டிச.25) முதல் டிச.31-ம் தேதி வரை மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் 20 இடங்களில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT