Regional03

மார்க்சிஸ்ட் கட்சி நூதன ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

செல்லூர் பகுதிக் குழு கிளைச் செயலாளர்கள் ஏ.முருகேசன், வி.பி.பன்னீர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கை மற்றும் கால், தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்றதுபோல் கட்டுப்போட்டும், டார்ச்லைட் அடித்தும், `மிகவும் அபாயகரமான சாலை மக்கள் பாதுகாப்புடன் பயணம் செய்யவும்' என்ற பதாகைகளை ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பகுதிக் குழுச் செயலாளர் நரசிம்மன், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள் திலகர், பழனியம்மாள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சசிகலா, பகுதிக்குழு உறுப்பினர்கள் கோட்டைச்சாமி,

குருநாதன், பாலசுப்பிரமணி, கிளைச் செயலாளர்கள் ராஜேஸ்வரன், கே.மீனாட்சி மற்றும் அப்பகுதியினர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கார்த்திகேயன், மாநகராட்சி உதவிப் பொறியாளர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு வாரத்துக்குள் சீரமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.

SCROLL FOR NEXT