Regional03

ரயிலில் கற்பூரம் ஏற்ற தடை

செய்திப்பிரிவு

சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியுள்ளதால் சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால், கேரளா செல்லும் ரயில்களில் தினமும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஓடும் ரயிலில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லவும் கற்பூரம் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வதை தடுக்க ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் சேலம் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் சேலம் ரயில்வே போலீஸார் கூட்டாக இணைந்து, ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். மேலும், சபரிமலை செல்லும் பக்தர்களிடம் கற்பூரம் ஏற்ற தடையுள்ளதை விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT