Regional03

தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு நகராட்சியில் 470-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச் செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையர் முஸ்தபா கமால் முன்னிலை வகித்தார். தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி என 7 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

துப்புரவு அலுவலர் சீனிவாசன், துப்புரவு ஆய்வாளர் ஜான் ராஜா உள்பட நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT