ஆக்கிரமிப்பில் இருந்த சேலம் சின்னக்கடை வீதி வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.4.50 கோடி மதிப்புள்ள கட்டிடம் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சேலம் உதவி ஆணையர் உமாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் சின்னக்கடைவீதியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக, சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலைக்கு அருகில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி கொண்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள கட்டிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை சேலம் இணை ஆணையர் உத்தரவின்படி மீட்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.