Regional02

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகஆசிரியர் நியமன அறிவிப்பாணை ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக ஆசிரியர் நியமனம் தொடர் பான அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கப் பொதுச் செயலர் எம்.எஸ்.பாலமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 உதவிப் பேராசிரியர் கள், இணைப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக 8.7.2019-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணை கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை யில் இருந்து மாறுபட்டிருந்தது.

அறிவிப்பாணையில் பல் கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் காலியிடம், இடஒதுக்கீட்டுப் பணியிடங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை அறி விக்க வேண்டும். இந்த நடை முறைகளைப் பின்பற்றாமல் மொத்தப் பணியிடத்துக்கும் ஒரே அறிவிப்பாணை வெளியிடப் பட்டது. எனவே, இந்த அறிவிப் பாணையை ரத்து செய்து இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பாரதி தாசன் பல்கலைக்கழகம் வெளி யிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. விதிகளைப் பின்பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண் டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT