திருநெல்வேலியில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் கணேசராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். 
Regional01

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக நகரச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், ஓன்றிய செயலாளர்கள் ரமேஷ், சுப்பையா பாண்டியன், வேல்முருகன், வாசு தேவன், நகர பொருளாளர் வேல்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி

SCROLL FOR NEXT