Regional02

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

செய்திப்பிரிவு

வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமகவின் மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல் தலைமை வகித்தார்.

கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், இடஒதுக்கீடு கோரியும் வாத்திய ஒலியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கக் கோரியும் பேரூராட்சி அலுவலகத்தில் பாமகவினர் மனு அளித்தனர்.

உடுமலை

SCROLL FOR NEXT