Regional02

சிதம்பரம் அருகே 25 பவுன் நகை திருடிய இருவர் கைது

செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத் தைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் சிதம்பரம்- கடலூர் புறவழிச் சாலையில், ஏ. மண்டபம் கிராமத்தில் மெடிக்கல் ஸ்டோர் வைத்துள் ளார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கடைக்குச் சென்றார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 25 பவுன் நகை மற்றும்வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்(36), சண்முகம்(45),ரமேஷ் ஆகியோர் நகைகளை திருடியது தெரிய வந்தது. தினேஷ், சண்முகத்தை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT