Regional01

பல்கலை.யில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு இலவச பயிற்சி

செய்திப்பிரிவு

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமியில் இந்திய குடிமைப் பணிகளுக்கான முதனிலை தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங் கவுள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வு ஜன.31-ல் நடைபெறும். பயிற்சி இலவசம், வெளியூர் நபர்களுக்கு தங்குமிடமும், மாதந்தோறும் உணவுப்படியாக 3000 ரூபாயும் வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை www.mkuniversity.co.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். ஜன.20-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 9865655180 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT