சேலம் மாநகர காவல்துறை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இச்சேவையை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சி யில், மாநகர காவல் துணை ஆணையர்கள் சந்திரசேகரன், செந்தில், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பாலசுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் கற்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவப் பணியாளர்கள், ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மடக்கும் படுக்கை உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களுக்காக திடீர் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வாக மாறிவருகிறது. இந்நிலையில், போராட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் தாக்கப்படும் ஆபத்தும் உள்ளது. மேலும், கலவர நேரங்களில் மக்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்படுவோரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்” என்றனர்.