Regional04

வருவாய்த் துறை அலுவலர்கள் தர்ணா

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயில் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 20 பெண்கள் உட்பட 70 பேர் கலந்து கொண்டனர். முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் நிகழாண்டுக்கான காலியிட மதிப்பீடு அறிக்கையை அந்தந்த மாவட்டங்களின் விகிதாச்சா ரத்துக்கேற்ப மறுநிர்ணயம் செய்ய வேண்டும். துணை ஆட்சியர் பட்டியலை நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தர்ணாவில் வலியுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT