குடும்பத் தகராறில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
ராமநாதபுரம் வ.உ.சி நகரைச்சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர் சரவணன் (35). இவரது மனைவி சிவபாலா (32). இவர்கள் காதலித்துத் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
கருத்துவேறுபாட்டால் வழக்கு
பின்னர், நீதிமன்றத்தில் இருந்து பள்ளிக்கு சிவபாலா நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற கணவர் சரவணன், நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி சிவபாலாவை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
பின்னர், அருகேயிருந்த கேணிக்கரை காவல் நிலையத்தில் சரண்அடைந்தார். சம்பவ இடத்தின் அருகிலேயே டிஐஜி, காவல்கண்காணிப்பாளர் அலுவலகங் கள் உள்ளன. மாவட்ட எஸ்.பி.இ.கார்த்திக், டிஎஸ்பி வெள்ளைத் துரை ஆகியோர் சம்பவ இடத் தைப் பார்வையிட்டனர்.
பேசித் தீர்க்க மறுப்பு