Regional02

சேலம் மாநகராட்சியில் ரூ.3.80 கோடி வரி வசூல்

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சியில் தீவிர வரி வசூல் முகாமில், ரூ.3.80 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்று வருகிறது. இதில், 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ரூ.3 கோடியே 80 லட்சத்து 43 ஆயிரத்து 755 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாக வரி நிலுவை வைத்துள்ள நபர்கள், வணிக நிறுவனத்தினரை நேரடியாக சந்தித்து வரி வசூல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT