Regional02

மல்லிகைப்பூ கிலோ ரூ.3132-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் வரத்து குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய மலர்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3132- க்கு விற்பனையானது.

காக்கடா கிலோ ரூ.850, சாதிமுல்லை ரூ.750, கனகாம்பரம் ரூ.600, முல்லை ரூ.500, செண்டு மல்லி ரூ.81, சம்பங்கி கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.

SCROLL FOR NEXT