தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற் றப்பட்ட நாளான 27.12.1956-ஐ நினைவுகூரும் வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் இன்று(டிச.23) முதல் 29-ம் தேதி வரை அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறு வனங்கள், கடைகள், உணவ கங்கள் ஆகியவற்றில் ஆட்சி மொழிச் சட்ட வாரத்துக்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசா ணையை வழங்கியும் கொண் டாடப்பட உள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சிகளில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை மாணவர்கள் ஆகியோர் சமூக இடைவெளியோடு பங்கேற்க உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.