தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அக்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பில் வாசுதேவநல்லூர், ஆத்துவழி, மேலபுதூர், தேசியம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் பெண் தூய்மைப் பணியாளர்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு, சேலை வழங்கப்பட்டது. அறக்கட்டளை கவுரவ ஆலோசகர் மு.செந்தீ, நிறுவனர் ராம், தலைவர் செல்வமாரியப்பன், பொருளாளர் சபிக் ரஹ்மான், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், ஶ்ரீ பிரியாதேவி நாச்சியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.