Regional02

கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களாக காலியாக இருக்கும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் இரா.முருகன், செயலாளர் த.பாபு செல்வன், பொருளாளர் மு. முத்துசாமி உள்ளிட்டோர் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) பணியிடத்தை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தர காலிபணியிடத்தில் நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பணி நியமன ஒப்புதல் ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT