Regional03

கனிமொழி எம்பி, 3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் திமுக. மகளிர் அணி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , சண்முகையா உட்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி அதிக அளவில் கூட்டம் கூடியதாக தென்பாகம் போலீஸார் கனிமொழி எம்பி, 3 எம்எல்ஏக்கள் மற்றும் 2,096 பேர் என மொத்தம் 2,100 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT