திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் (கிழக்கு) 14 அணிகளுக்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக் கான ஆலோசனைக் கூட்டம் காப்பலூரில் நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “பொறுப்பில் உள்ளவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டால், கோட்டையில் நமது கொடி பறக்காது. எனக்கு பிறகும் நூறு ஆண்டுகள் அதிமுக இயக்கம் இருக்கும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதை உணர்ந்து புதிய நிர்வாகிகள் விசுவாசமாக செயல்பட வேண் டும். கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுகவின் வெற்றி தொடர, உங்களது முழு ஒத்துழைப்பு தேவை” என்றார்.
இதில், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் மண்ணு உட்பட பலர் கலந்துகொண்டனர்.