Regional02

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தி.மலை மாவட்டத்துக்கு 9,410 மின்னணு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத் துக்கு 9,410 மின்னணு இயந் திரங்கள் நேற்று வந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தி.மலை மாவட்டத்துக்கு 1,480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,780 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 4,150 ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் இயந்திரங்கள் நேற்று வந்து சேர்ந்தன.

தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலை மையில் அரசியல் கட்சியினர் முன்னிலையில், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

இது குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, “மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான், நாசிக், துலே, நந்தூர்பார் மாவட்டங்களில் இருந்து 1,480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,780 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,150 ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கும் இயந்திரங்கள் வந்து சேர்ந்துள்ளன. இதன்மூலம், தி.மலை மாவட் டத்தில் மொத்தம் 5,037 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,852 கட்டுப்பாட்டு இயந்திரங் களும், 4,152 ஒப்புகைச் சீட்டுகளை இயந்திரங்களும் உள்ளன.

கூடுதலாக வாக்குச் சாவடிகள்

அதன்படி, கணக்கீடு செய்தாலும் வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் 70 சதவீதமும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 30 சதவீதமும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் 40 சதவீதம் கூடுதலாக உள்ளன. இயந்திரங்களை சரி பார்க்க(முதல் நிலை) பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் விரைவில் வர உள்ளனர்.

இதற்கு முன்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் வந்துள்ள இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணைய கைப்பேசி செயலி மூலமாக ஸ்கேன் செய்யும் பணி நாளை (இன்று) முதல் தொடங்கும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT