Regional02

தனியார்மயத்தை கண்டித்து மின் ஊழியர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

மின்துறை கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கப்பட்டு வருவதை கண்டித்து மின்ஊழியர் அமைப்புகள் சார்பில் நேற்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ஊழியர்கள் நியமனம்உள்ளிட்டவற்றையும் தனியாரிடம் ஒப்படைக்க மின்துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளைச் சேர்ந்த மின்துறை அலுவலக ஊழியர்கள் காஞ்சிபுரம் அருகே உள்ள ஒலிமுகமதுபேட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் வாரியஅலுவலகங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதேபோல் செங்கல்பட்டு மினவாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் மின் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

SCROLL FOR NEXT