பயிர் சேதம் கணக்கெடுப்பில் பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional02

பயிர் சேதம் கணக்கெடுப்பில் பாரபட்சம் திட்டக்குடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திட்டக்குடி பகுதியில் பயிர்கள் சேதம் குறித்த கணக்கெடுப்பில் பாரபட்சமாக செயல்படும் அதிகாரி களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திட்டக்குடி பகுதியில் புயல் மற்றும் மழை காரணமாக சோளம், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதமடைந்தன. பருத்தி, மரவள்ளி பயிர்களின் சேதத்தை வேளாண் அதிகாரிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டனர். மக்காச்சோள வயல்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை அதிகாரிகள் பொருட்படுத்தவி்ல்லை. ஒரு சில கிராமங்களில் மட்டும் சோள வயல்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுத்தனர். இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் பட்டூர் வேளாண் விரிவாக்க அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் விவசாயிகள் குழுவின் தலைவர் தனபால் தலைமையில் வேளாண் உதவிஅலுவலரிடம் மனு அளித்தனர். இதே போல், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திட்டக்குடி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT