திருமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக மகளிர் அணியினர். 
Regional01

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் மதுரை, திருமங்கலத்தில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரி வித்து, திமுக மகளிரணி சார்பில் மதுரை, திருமங்கலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சமீபத்தில் ரூ.100 வரை உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை புறநகர் தெற்கு, வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிரணி அமைப்பாளர்கள் ரேணுகா ஈஸ்வரி (வடக்கு), லதா (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மணிமேகலை, பஞ்சு, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, தொண்டரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை மாநகர் மகளிரணி சார்பில் அண்ணாநகரில் முன்னாள் அமைச்சர் தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

SCROLL FOR NEXT