புகார் தெரிவிக்க வரும் பொது மக்களை இன்முகத்துடன் வரவேற்க மதுரை நகர் காவல் நிலையங்களில் பிரத்யேக காவலர்களை நியமிக்க காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மதுரை மாநகரிலுள்ள 24-க்கும் மேற்பட்ட காவல் நிலையங் களில் பெண் காவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 9 முதல் இரவு 8 மணி வரை பணியில் இருப்பர்.
இக்காவலர்களுக்கு வேறு பணி வழங்கப்பட மாட்டாது. பொதுமக்கள் எளிதில் அடை யாளம் காணும் வகையில் பிரத் யேக பேட்ஜ் அணிந்திருப்பர். வரவேற்பு காவலர்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு ஆகிய அனைத்துக்கும் பொதுவான அலுவலராகச் செயல் பட உத்தர விடப்பட்டுள்ளது.
வரவேற்பு காவலரிடம் தகவல் பெறும் மக்கள் அமர இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. எழுத படிக்கத் தெரியாத மக்களுக்கு புகார் மனு எழுதித் தரும் பணியிலும் இவர்கள் ஈடுபடுவர். ஆன்லைனில் புகார் பதிவு செய்யும் முறை குறித்து பொதுமக்களுக்கு இவர்கள் விளக் கம் அளிப்பர். மேலும், புகார் மீது காவல்துறையினரால் எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித் தும் மனுதாரரிடம் தெரிவிப்பர். வரவேற்பு காவலர்களின் சேவையை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தெரிவித்துள்ளார்.