மேச்சேரி சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜேஎஸ்டபிள்யூ அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. உதவித்தொகை பெற்ற மாணவர்களுடன் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் சேலம் அதிகாரிகள். 
Regional02

ஜேஎஸ்டபிள்யூ அறக்கட்டளை சார்பில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த 185 மாணவர்களுக்கு உதவித்தொகை

செய்திப்பிரிவு

மேச்சேரியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 185 மாணவர்களுக்கு ஜேஎஸ்டபிள்யூ அறக்கட்டளை சார்பில் ரூ.39 லட்சத்து 76 ஆயிரத்து 864 உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் சேலம் ஒர்க்ஸின் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் மூலம் சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு, விளையாட்டு மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜேஎஸ்டபிள்யூ அறக்கட்டளை மூலம் செயல்படுத்தி வருகிறது. மேலும், கிராம பகுதியைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மேச்சேரியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 185 மாணவர்களுக்கு ஜேஎஸ்டபிள்யூ உதான் உதவித்தொகையாக ரூ.39 லட்சத்து 76 ஆயிரத்து 864-க்கான காசோலையைஅந்நிறுவன தலைமை அதிகாரி பி.என்.எஸ் பிரகாஷ் ராவ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிஎஸ்ஆர் பிராந்திய தலைமை நிர்வாகி டாக்டர் விஸ்வநாத் பல்லட், ஏவிபி மக்கள் தொடர்பு நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பிரிகேடியர் சஞ்சய் தாக்கூர் (ஓய்வு), பொது மேலாளர் (மனித வளம்) அம்ப்ரோஸ், சிஎஸ்ஆர் மேலாளர் பி.பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT