சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: என்.ராஜேஷ் 
Regional02

திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரதிமுக மகளிரணி துணை அமைப்பாளர் சவுந்திரம் முத்தரசு தலைமை வகித்தார். மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மல்லிகா அருள் தலைமை வகித்தார்.

தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு தென்காசி தெற்கு மாவட்டதிமுக மகளிரணி அமைப்பாளர் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

வடக்கு மாவட்ட அமைப்பாளர் சைபுன்நிஷா முன்னிலை வகித்தார். மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பூங்கொடி வரவேற்று பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் கண்டன உரையாற்றினார்.

தூத்துக்குடி

எம்எல்ஏக்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சண்முகையா, மாவட்ட மகளிரணி செயலாளர்கள் கஸ்தூரி தங்கம், ஜெஸி பொன்ராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில்

SCROLL FOR NEXT