Regional01

கடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் சிசிடிவி உடைப்பு

செய்திப்பிரிவு

கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ளமாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் அலுவலக வளாகத்தில், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கள் அந்த அலுவலக கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கற்களைவீசி உடைத்துள்ளனர். அலுவலக வராண்டாவில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்துள்ளனர். பின்பக்கம் இருந்த சிசிடிவி கேமராவை யும் திருடி சென்றுள்ளனர்.

இரவு பணியில் இருந்த காவலாளி குணசேகரன் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது மர்மநபர்கள் ஓடியுள்ளனர். இதுகுறித்துநேற்று கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட் டது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT