Regional01

ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு ஊதியம் உயர்வுமதுரை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு (குடிநீர் விநியோகம்) தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஊதியம் வழங்குவது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து அனைத்து அலுவலர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் முனியசாமி தலைமையிலான ஊழியர்கள், நிறுத்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் ச.விசாகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவைப் பரிசீலித்த ஆணையர், ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கான ஊதியத்தை ரூ.1,000 உயர்த்தி வழங்க உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT