தமிழக அரசின் உத்தரவின்பேரில் கட்டுமானப் பணியாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 2021-ம் ஆண்டுக்கான சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் ஆணையின் அடிப்படையில், மதுரை ஆவின் மூலம் 100 மில்லி நெய் பாட்டில் சுமார் 2,52,000 பாட்டில்கள் தயாரித்து மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது வரை 1,65,000 பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 75,313 நெய் பாட்டில்கள் தற்போது வரை விநியோகிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 87,074 நெய் பாட்டில்கள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.