Regional01

திருத்தப்பட்ட கூடுதல் ஓய்வூதியம்ஓய்வு இன்ஸ்பெக்டர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

இதுதொடர்பாக கடந்த மாதம் 12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி திருத்தப்பட்டக் கூடுதல் ஓய்வூதியத்தை வழங்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் காவல் துறை தலைமை அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும், தற்போது வரை அரசாணை செயல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர்கள் சிலர் கூறுகையில், அரசு வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT