ஹானா ஜோசப் மருத்துவமனையில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற வக்புவாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல்காதிர், மருத்துவர்கள் கவிதா, மாதவன் உள்ளிட்டோர். 
Regional01

அதிக இதய நோயாளிகள் பட்டியலில் இந்தியா இதய சிகிச்சை நிபுணர் தகவல்

செய்திப்பிரிவு

அதிக இதய நோயாளிகள் உள் ளோர் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளதாக இதய சிகிச்சை நிபுணர் மாதவன் தெரிவித்தார்.

மதுரை பிளாசம் ரோட்டரி சங்கம், ஹானா ஜோசப் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச உடல் பரிசோதனை முகாமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தின. ரோட்டரி உறுப்பினரும், ஹானா ஜோசப் மருத்துவமனை முதுநிலை மனநல மருத்துவருமான கவிதா வரவேற்றார். மருத்துவமனை தலைவர் அருண்குமார், வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல் வர் அப்துல் காதிர் ஆகி யோர் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தனர்.

இதில் இதய சிகிச்சை நிபுணர் மாதவன் பேசியதாவது:

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, அதிக இதய நோயாளி களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. இதயம் மகத்தான இயந்திரம். அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும் என்றார்.

ரோட்டரி உதவி ஆளுநர் தேவசேனா முரளி, தலைவர் லட்சுமி பன்சிதர், செயலர் ஜெயந்தி கலைராஜன், பொரு ளாளர் ஹேமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ மனையின் மார்க்கெட் டிங் பொதுமேலாளர் சேகர் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT