Regional02

பாஜகதான் அதிமுகவின் முதலாளி கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து

செய்திப்பிரிவு

பாஜகதான் அதிமுகவின் முத லாளி. அதைத் தான் அக்கட்சி யின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வெளிப்படுத்தியுள்ளார் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

மானாமதுரை அருகே முத்த னேந்தலில் காங்கிரஸ் மேற்கு வட்டாரம் சார்பில், சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் கரு.கணேசன் தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார். சட்டப் பேரவைப் பொறுப்பாளர் சஞ்சய்காந்தி, எஸ்.சி., எஸ்.டி. மாநிலத் துணைத் தலை வர் செல்வராஜ், மூத்த நிர்வாகி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, பாஜகதான் அதிமுகவின் முதலாளி. அதனால்தான் அக் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், தாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம் என்கிறார். இதுவரை மறைமுகமாக இருந்த விஷயம், தற்போது வெளியே வந்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT