Regional02

அங்கன்வாடி மையம் கட்டியதில் முறைகேடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

அங்கன்வாடி மையம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்டம், நல்லுத் தேவன்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நல்லுத்தேவன்பட்டியில் அங்கன்வாடி மையம் கட்ட ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய பிடிஓ பிரேமா படையாச்சி, நல்லுத்தேவன்பட்டி ஊராட்சித் தலைவர் சித்ரா, செயலர் பால் ராஜ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பில், அங்கன்வாடி மையம் கட்ட நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைப் பயன் படுத்தியது சட்டவிரோதம் எனக் கூறப்பட்டிருந்தது. அரசு வழக் கறிஞர் வாதிடுகையில், ஊராட்சித் தீர்மானத்தின் அடிப்படையில்தான் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது என்றார். அரசுத் தரப்பில் ஊராட்சி தீர்மான நகல் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியது தெரி யாமல் மனுதாரர் மனுத் தாக்கல் செய்துள்ளார். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT