Regional01

வனத்துறை ஊழியருக்கு கரோனா தொற்று முட்டல் அருவியில் குளிக்க தடை

செய்திப்பிரிவு

ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் அருவி உள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், இங்குள்ள ஏரி படகு குழாமில் படகு சவாரி செல்லவும் 8 மாதங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது.ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, கடந்த சில வாரத்துக்கு முன்னர் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப் பட்டது.

முட்டல் அருவிக்கு பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வரத் தொடங்கினர். தடை நீக்கப்பட்ட ஒரு வாரத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரண மாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மீண்டும் குளிக்கவும், ஏரியில் படகு சவாரிக் கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங் களுக்கு முன்னர் முட்டல் அருவியில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு குறைந்து அருவி யில் நீர் வரத்து சீரானது. இதனால், தடை நீக்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. இந் நிலையில், வனத் துறை ஊழி யர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து, அருவி யில் குளிக்க தடை தொடர்கிறது.

இதுதொடர்பாக வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, “கடந்த சில நாட்களாக அருவி யில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலை யில், பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், அருவி பகுதியில் பணிபுரியும் வனக்காப்பாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் அருவியில் பயணிகள் குளிக்க தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவி மற்றும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

SCROLL FOR NEXT