கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் 1 நிமிடத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சியின்போது மரக்கன்றுகளை நடவு செய்த தன்னார்வலர்கள் 
Regional02

1 நிமிடத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் 1 நிமிடத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் 1 நிமிடத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, ‘உயிர் ஆயிரம்’, ‘மைடி ஆப்’ ஆகிய செயலிகள் மூலம் ஆன்லைன் முறையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏடிஎஸ்பி சக்திவேல், டிஎஸ்பி கவுதம் கோயல், உதவி வனப் பாது காவலர் காத்திகாயினி ஆகியோர் தலைமை வகித்தனர். கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், வனச் சரகர் சக்திவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

536 தன்னார்வலர்கள் பங்கேற்று வேம்பு, நாவல், பூவரசன், மலைவேம்பு, புங்கன், கொய்யா, பாதாம் உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 1,072 மரக் கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சி 1 நிமிட நேரத்தில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியை, ‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற அமைப்பு ஆன்லைன் மூலம் கண்காணித்து உலக சாதனையாக பதிவு செய் துள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார் வலர்கள் அனைவருக்கும், ஒருங் கிணைப்புக் குழு சார்பில், ‘பசுமை பங்காளர்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT