சாத்தான்குளத்தில் காவல்துறை சார்பில், பொதுமக்கள் பங்களிப் புடன் சுமார் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு, சாத்தான்குளம் கல்விக் கழகச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார் முன்னிலை வகித்தார். மனிதநேய நல்லிணக்க பெருமன்றச் செயலா ளர் மகா.பால்துரை வரவேற்றார். வழக்கறிஞா் வேணுகோபால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
புதிய பேருந்து நிலையம் எதிரே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தொடங்கி வைத்துப் பேசினார். வட்டாட்சியர் லட்சுமி கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோரும் பேசினர்.
தொழிலதிபர் ஜெயசீலன் கண்காணிப்புக் கேமரா அமைக்க நிதி வழங்கினார். எஸ்பி தனது பங்களிப்பாக ரூ. 10 ஆயிரம் வழங்கினார். இன்ஸ்பெக்டர் பெர்னாா்டு சேவியர், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரித் தாளாளர் சசிகரன், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபதி, ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், அரிமா சங்கத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.